ஒழுக்கமான வாழ்க்கைக்கும் ஜபத்திற்கும் உள்ள தொடர்பு
நான்கு நெறிமுறைகளைப் பின்பற்றுவது (சூதாட்டம், போதை, முறையற்ற காமம், புலால் உண்ணுதல் தவிர்த்தல்) ஜபத்திற்குத் தேவையான வலிமையைத் தருகிறது.
புனிதமான இதயம்
திருநாமம் ஒரு பரிசுத்தமான விதை. அது வளர வேண்டுமானால் இதயம் என்னும் மண் சுத்தமாக இருக்க வேண்டும். முறையற்ற பழக்கங்கள் இதயத்தை மாசுபடுத்துகின்றன, இதனால் திருநாமம் அங்கே நிலைத்து நிற்பதில்லை.
மனக் கட்டுப்பாடு
ஒழுக்கமான வாழ்க்கை முறையானது மனதை அமைதியாகவும், ஒருமுகப்படவும் வைக்கிறது. புலன் நுகர்ச்சியில் மூழ்கிய ஒருவருக்கு ஜபத்தின் போது கிருஷ்ணரை நினைப்பது கடினமாக இருக்கும்.
நேர்மை (Intergrity)
ஒரு பக்தன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசக்கூடாது. ஜபத்தின் மூலம் பகவானைச் சரணடையும்போது, நமது அன்றாடச் செயல்களும் அதற்கேற்பத் தூயதாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம் என்பது ஒரு வேலி போன்றது; அது நமது ஜபம் என்னும் செடியைப் பாதுகாக்கிறது. ஒழுக்கத்துடன் கூடிய ஜபம் ஒருவரை மிக வேகமாகத் தூய நிலைக்குக் கொண்டு செல்லும்.